வாழ்வா, சாவா நிலையில் ராஜசேகர்

Bookmark and Share

வாழ்வா, சாவா நிலையில் ராஜசேகர்

தலைப்புகளில் மட்டுமல்ல அவரின் திரைப்படங்களிலும் ரத்தம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும் இது தமிழ் என்றாலும் சரி, தெலுங்கு என்றாலும் சரி ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் நடிகர் ராஜசேகர்.

கடந்த சில வருடங்களாக பல இன்னல்களை சந்தித்தார் ராஜசேகர். தற்போது கத்தம் கேங் என்ற படத்தில் நடித்திருக்கும் இவர் இதற்குமேல் ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை, குணச்சித்திர வேடங்களில் நடிக்கவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் சூதுகவ்வும் திரைப்படத்தின் தெலுங்கி ரிமேக் உரிமையையே பல கோடி கொடுத்து வாங்கியிருந்தார் இவர். சூதுகவ்வும் ரிமேக்கில் அவரே நடித்து தற்போது படத்தின் புரமோஷன்களில் பணத்தை தண்ணீர் போல செலவழித்துவிட்டார், கத்தம் கேங்கின் ரிசல்ட் வைத்தே இவரின் அடுத்தடுத்த சினிமா வாழ்க்கை அமையப்போகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்று வெளியாகியுள்ள கத்தம் கேங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பை பெறப்போகிறது என்று நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருக்கிறார் ராஜசேகர். இசையமைப்பாளர் அச்சு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜீவிதா ராஜசேகர் படத்தை தயாரித்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions