விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ராஜசேகர்...!!

Bookmark and Share

விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ராஜசேகர்...!!

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சூது கவ்வும்'. வித்தியாசமான கதாபாத்திரங்கள், திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம் என இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரு நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அட்டகாசமாக நடித்து அவருடைய நடிப்பிபுத் திறமையின் இன்னொரு பரிமாணத்தையும் காட்டினார்.அந்தப் படத்தை 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் 'கட்டம் கேங்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து முடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர் நடித்திருக்கிறார். இடையில் இந்தப் படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், தற்போது படத்தை எடுத்து முடித்து அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன் உதவியாளரான சந்தோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சஞ்சிதா ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தில் ஷீனா ஷகாபடி நடித்திருக்கிறார்.

ஷீனாவை, டாக்டர் ராஜசேகர் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் 'கட்டம் கேங்' படத்தின் புகைப்படம் தற்போது டோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜசேகர் நடித்து வெளிவர இருக்கும் இப்படத்தின் புகைப்படம் டோலிவுட்டையே 'ஷாக்' அடிக்க வைத்திருக்கிறது.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!
விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions