ராஜதந்திரத்தை கைப்பற்றிய ஃபாக்ஸ் ஸ்டார்

Bookmark and Share

ராஜதந்திரத்தை கைப்பற்றிய ஃபாக்ஸ் ஸ்டார்

வீரா, ரெஜினா கெசன்ட்ரா, பட்டியல் சேகர், அஜய் பிரசாத், மற்றும் புதுமுகமான தரூபுக்கா சிவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ராஜதந்திரம்’. இப்படத்தை ஏ.ஜி.அமீத் என்பவர் இயக்கியுள்ளார்.

படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் இப்படத்தின் டீசரையும் படக்குழுவினர் ராஜதந்திரமாய் வெளியிட்டனர். படத்தில் இடம்பெறும் முக்கிய 6 கதாபாத்திரங்களின் சுபாவம் வெளிப்படும் வகையில் இப்படத்தின் டீசர்களை 6 விதமாக உருவாக்கி, அவற்றை 6 திரை நட்சத்திரங்கள் டுவிட்டர் மூலமாக வெளியிட்டனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு டீசர் டுவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

இப்படத்தை வொய்ட் பக்கெட் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சன்லேன்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இவ்வளவு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ராஜதந்திரம்’ படத்திற்கு மேலும் ஒரு மணிமகுடமாய், ‘ராஜா ராணி’, ‘குக்கூ’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற வெற்றிப்படங்களை உலகெங்கும் வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ‘ராஜதந்திரம்’ படத்தையும் உலகெங்கும் வெளியிடவிருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறும்போது, எங்களது முதல் தயாரிப்பான ‘ராஜதந்திரம்’ மூலமாக ஃபாக்ஸ் ஸ்டார் போன்ற பெரும் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதை எண்ணி பெருமையடைகிறோம்.

இந்த கைகோர்ப்பின் மூலம் பல்வேறு இடங்களிலிருந்து பெருவாரியான ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு பெருகியுள்ளது. இது எங்களுக்கு பெரும் வரவேற்பும் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமான படமாக மாறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்றனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions