போலீஸ் வேடத்தில் மொட்டை ராஜேந்திரன்!

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் மொட்டை ராஜேந்திரன்!

வடிவேலு, சந்தானம் போன்ற மெகா காமெடியன்கள் ஹீரோவாகி விட்டதால் இப்போது சூரி முதன்மை காமெடியனாகி விட்டார். என்றபோதும், அதற்கடுத்து பல காமெடியன்கள் வளர்ந்து கொண்டு வந்தநிலையில், இப்போது மொட்டை ராஜேந்திரனின் மார்க்கெட் எகிறி நிற்கிறது. இன்னும் சொல்லப்போனால் டி.ராஜேந்தர் பாணியில் தனக்குத்தானே குத்துப்பாட்டு பாடி நடனமாடும் அளவுக்கு ரொம்பவே உசந்து விட்டார்.

இந்த நிலையில், ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்து வரும் காமெடி படமான அப்பாடக்கரில்(சகலகலா வல்லவன்) போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம் ராஜேந்திரன்.

ஊருக்குள் அடிக்கடி போலீஸ் ஜீப்பில் வந்து கையில் லத்தியுடன் பிரச்னைக்குரிய நபர்களை துருவி துலாவிக்கொண்டு திரியும் மொட்டை ராஜேந்திரனிடம், ஒருமுறை ஜெயம்ரவி-சூரி சம்பந்தப்பட்ட பங்காளி பிரச்னையும் பஞ்சாயத்துக்கு செல்கிறதாம்.

அப்போது அதை தீர்த்து வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் செம காமெடியாக படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் முதலில் டெரராக காக்கி சட்டை அணிந்து கொண்டு வரும் ராஜேந்திரன் பின்னர் காமெடி போலீசாகி விடுகிறாராம்.

அந்த வகையில், சூரி ஒரு பக்கம் கலக்கினால் இவர் இன்னொரு பக்கம் செம கலக்கு கலக்கியிருக்கிறாராம். அதனால் அப்பாடக்கர் படம் டக்கர் காமெடியாக உருவாகியிருக்கிறதாம்.


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions