மீண்டும் லீடு ரோலில் நான் கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

மீண்டும் லீடு ரோலில் நான் கடவுள் ராஜேந்திரன்!

நான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி மார்க்கெட் பரபரப்பாகியிருக்கிறது. கடந்த ஆண்டில் ராஜா ராணி, திருடன் போலீஸ், வெள்ளக்கார துரை ஆகிய படங்கள் அவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கிக்கொடுத்தன.

அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டார்லிங் படம் அமோக வரவேற்பினை கொடுத்தது. அதோடு நில்லாமல், தண்ணியில கண்டம் அவரை இன்னும் பெரிதாக பேச வைத்த படமானது. அந்த படத்தில் அதிரடியான ரவுடி போன்று அவர் நடித்திருந்த வேடம், அதிரடி காமெடியனாக அவரை மாற்றியது. அதனால் அந்த படத்தின் போஸ்டர்களில் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விளைவு, நண்பேன்டா, மாஸ், காஞ்சனா-2, எலி ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த நான் கடவுள் ராஜேந்திரனின் கையில் தற்போது 10 படங்களுக்கும் மேல் உள்ளது. அதில் ஒரு படம்தான் இவ்ளோ நாளாய் எங்கடா இருந்தீங்க.

இந்த படத்தில் அவர்தான் லீடு ரோலில் நடிக்கிறார். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே கதை பண்ணப்பட்டிருப்பதால், இதுவரை நடித்ததில் இந்த படத்துக்குத்தான் கூடுதல் நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் ராஜேந்திரன்.


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions