நான் கடவுள் ராஜேந்திரன் குணச்சித்ர நடிகரானார்

Bookmark and Share

நான் கடவுள் ராஜேந்திரன் குணச்சித்ர நடிகரானார்

நான் கடவுள் ராஜேந்திரன் ஸ்டன்ட் நடிகராக இருந்து வில்லன் நடிகராகி, இப்போது முன்னணி காமெடியனாகியிருப்பவர்.

இப்போது பல படங்களில் அவரை போஸ்டரில் காட்டும் அளவுக்கு கமர்சியல் காமெடியனாகி விட்டார்.  பாபிசிம்ஹா நடித்து வரும் பாம்பு சட்டை உள்பட பல படங்களில் ஷோலோ காமெடியனாக நடித்திருப்பவர் விஜய்யின் 59வது படத்திலும் காமெடி செய்து வருகிறார்.

இந்நிலையில், ஜிப்பா ஜிமிக்கி என்ற படத்தில் குணசித்ர நடிகராகவும் அவதாரமெடுத்துள்ளார் ராஜேந்திரன். ஏற்கனவே பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் தம்பி ராமைய்யாவுடன் இணைந்து ஒரு பாடலில் பின்னணி பாடி குத்தாட்டமும் ஆடியுள்ள இவர், ஜிப்பா ஜிமிக்கி படத்தில் குணசித்ர நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கதைப்படி இப்படத்தில் அவருக்கு விவசாயி வேடமாம்.அதனால், ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு பாட்டு பாடியபடி நடித்திருக்கிறார். அந்த பாடலில் ஸ்டெப் வைத்து ஆடியும் அமர்க்களப்படுத்தியிருக்கும் அவர், மற்ற படங்களை மாதிரி காமெடி செய்யாமல் மனதை தொடும் வித்த்தில் நடித்திருக்கிறாராம்.

இந்த படத்தின் ரெஸ்பான்சைப் பொறுத்தே பிறகு வரும் படங்களில் வெறும் காமெடியனாக மட்டுமின்றி, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடிக்கவுள்ளார் ராஜேந்திரன். 


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions