மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு

Bookmark and Share

மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு

வில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். ‘தெறி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை அடுத்து, தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் தீவிரமாக நடித்து வரும் ராஜேந்திரன் சமூக வலைத்தளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர்.

ஆனால், அவர் பெயரில் போலியான ஆசாமிகள் ட்வீட்டர் கணக்கை (@Rajendran_offl) ஆரம்பித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சர்ச்சை வளர்ந்ததை அடுத்து இன்று (22.8.16) காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார் ராஜேந்திரன்.

புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சைபர் க்ரைம் மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்கள்.

ராஜேந்திரன் பெயர் கொண்ட ட்வீட்டர் கணக்கை முடக்குவதுடன் மட்டும் அல்லாது, சம்பந்தப்பட்ட ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும் காவல் துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது.

 


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!
படமுழுவதும் விஜயுடன் காமெடியில் கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions