ராஜேந்திரன் நல்ல மார்க் வாங்குவார் - SN சக்திவேல்

Bookmark and Share

ராஜேந்திரன் நல்ல மார்க் வாங்குவார் - SN சக்திவேல்

VVR Cinemask நிறுவனத்தின் 'இவனுக்கு தண்ணில கண்டம்' திரைப்படத்தில் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர் தீபக், புதுமுகம் நேஹா ரத்னாகரன், சென்ட்ராயன், குமாரவேல், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் வெகுவேகமாக பரவியது. அதற்கு நான் கடவுள் ராஜேந்திரனின் நடிப்பும் , வசனங்களும் முக்கிய பங்கு வகித்தது. “ ராஜேந்திரன், இயக்குனரின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகர்.

சமீபமாக ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவு இப்படத்தில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளது. வணிக ரீதியிலும் உதவியுள்ளது. இப்படத்தின் கதை எழுத ஆரம்பித்த நாள் முதலே மார்க் கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் வடிவமைத்து வந்தோம்.

'பாட்ஷா' படத்திற்கு டப்பிங் பேசும் காட்சியும், குளிக்கும் பெண்மணிக்கு சோப் எடுக்க உதவும் காட்சியும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.” இயக்குனர் சக்திவேல் கூறினார். “ அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.

இப்படத்திற்கு பிறகு குழந்தைகளும் ராஜேந்திரனுக்கு ரசிகர்கள் ஆகிடுவார்கள். மார்க் என்ற கதாபாத்திரத்தில் நல்ல மார்க் வாங்குவார் ராஜேந்திரன். இவரின் நகைச்சுவைக்கலந்த நடிப்பிற்கு ரசிகர்கள் திரளாக வருவார்கள் என நம்புகிறோம் “ எனக் கூறினார் இயக்குனர் சக்திவேல்.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்
சிம்புவின் மறுபெயர் தாமதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions