ராஜேந்திரனை முன்னிறுத்தும் படங்கள்

Bookmark and Share

ராஜேந்திரனை முன்னிறுத்தும் படங்கள்

'நான் கடவுள்' படத்தில் இயக்குனர் பாலாவால் கொடூர வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜேந்திரன். அதன் பின் சில படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தார்.

ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்து ரசிக்கப்பட்டார். அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 'ராஜா ராணி' படம் ராஜேந்திரனுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பைக் கொடுத்தது.

அந்தப் படத்தில் வித்தியாசமான நகைச்சுவை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார். சமீபத்தில் வெளிவந்த 'திருடன் போலீஸ்' படமும் அவருடைய நகைச்சுவையான வில்லத்தனத்தில் பெரிதும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ராஜேந்திரனை மையமாக வைத்தும் பல 'மீம்' கள் உருவாக்கப்பட்டன.

ராஜேந்திரனுக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ள வரவேற்பைப் பார்த்து பல படங்களில் அவரை விளம்பரங்களிலும் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துவிட்டனார். பொங்கலுக்கு வெளிவந்த 'டார்லிங்' படத்தில் 'கோஸ்ட் கோபால்' கதாபாத்திரத்தில் கொஞ்சமே வந்தாலும் ரசிகர்கள் அவரை மிகவும் ரசித்தார்கள்.

தற்போது விரைவில் வெளிவர இருக்கும் 'இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தின் 'ஃபர்ஸ்ட் கட்டிங்'ல் படத்தின் நாயகனை விட ராஜேந்திரனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து அவரை வைத்தே டீசரை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த டீசரில் 'என்னை அறிந்தால்' படத்தின் 'மெல்லிசான கோடு' வசனத்தையும், 'பில்லா' பட வசனமான 'ஐயாம் பேக்' வசனத்தையும் வைத்து புதிய டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துல இருக்கிற வசனத்துக்குத்தான் 'டைமிங்' வைப்பாங்க. ஆனால், டீசரையும் 'டைமிங்' கா ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்
சிம்புவின் மறுபெயர் தாமதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions