சம்பளத்தை உயர்த்திய நான் கடவுள் ராஜேந்திரன்

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்திய நான் கடவுள் ராஜேந்திரன்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சூரியும் தன் சம்பளத்தை கடுமையாக உயர்த்திவிட்டார். எனவே தற்போதுகாமெடியன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்த பஞ்சத்தை தற்போது போக்கி வருவது நான் கடவுள் ராஜேந்திரன்தான்.  மிரட்டும் வில்லனாக அறிமுகமான நான் கடவுள் ராஜேந்திரன் இப்போது சிரிக்க வைக்கும் காமெடியனாகிவிட்டார்.

ராஜாராணி படத்துக்குப் பிறகு இவரை காமெடியனான புக் பண்ணவே அனைவரும் விரும்புகின்றனர். டார்லிங், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்களில் ராஜேந்திரனின் காமெடி பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.

நேற்று வெளியான மாஸ் படத்திலும் சில காட்சிகளிலேயே வந்தாலும் கலக்கி இருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். அதுமட்டுமல்ல மாஸ் படத்தின் வானொலி விளம்பரங்களை நான் கடவுள் ராஜேந்திரனை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் தனக்கு மவுசு கூடிக்கொண்டு வருவதை புரிந்து கொண்ட அவர் தன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தினமும் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது தினமும் 1 லட்சம் சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ளார்.

அவர் 2 லட்சம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’
பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் மொட்டை ராஜேந்திரன்!
பழசை மறக்காத மொட்டை ராஜேந்திரன்!
நில மோசடி விவகாரம்: முதல்வர் தனிப்பிரிவில் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் புகார்
சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன்: விஷால் அதிரடி
ரொமான்ஸ் செய்யும் மொட்டை ராஜேந்திரன்
சிம்புவின் மறுபெயர் தாமதம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions