கார்ட்டூன் தொடர்களில் சதி இருக்கிறது: நடிகர் ராஜேஷ்

Bookmark and Share

கார்ட்டூன் தொடர்களில் சதி இருக்கிறது: நடிகர் ராஜேஷ்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சோவியத் ரஷ்ய புரட்சி 100-வது ஆண்டு விழா மற்றும் என்.வரதராஜன் நினைவு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் திரைப்பட நடிகர் ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-

நாட்டை முதலாளித்துவம் அடிமைப்படுத்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், அதை விட நுகர்வோர் கலாசாரத்துக்கு மக்கள் அடிமையாகிவிட்டார்கள். நவீன உலகில் கொள்முதலுக்கே மக்கள் அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறார்கள். இதுதான் சமுதாயத்தை மிகவும் பாதிக்கிறது.

இளைய சமுதாயம் மதுவுக்கும், ஆபாசபடங்களுக்கும் அடிமைபட்டுபோய் கிடக்கிறது. இது மூளையை தவறு செய்ய தூண்டும். இதே போல ‘வாட்ஸ்அப்’ என்பது ஒரு வியாதி என பலரும் உணராமல் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை கவனிக்காமல், ‘வாட்ஸ்அப்’பில் மூழ்கிவிடுகிறார்கள்.

குழந்தைகள் தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் தொடர்களை விரும்பி பார்க்கிறார்கள். இதில் ஒரு சதி இருக்கிறது. அதாவது, பசு மற்றும் பன்றிகள் மூலம் ஒரு புதுவிதமான விலங்கை உருவாக்கியது போன்று அவர்கள் காண்பிக்கிறார்கள். தற்போது இது வேடிக்கையாக தெரியலாம். ஆனால் எதிர்காலத்தில் அது நிஜத்தில் அரங்கேறும்.

அதற்கான மூளைச்சலவையை செய்யும் பணியில்தான் சிலர் களம் இறங்கி இருக்கிறார்கள். தற்போது இதை ரசிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள். எனவே, இதுபோன்ற சதிகளை முறியடிக்க கார்ட்டூன் தொடர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் போராட வேண்டும்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆண்டவனும் (கடவுள்), ஆண்டு கொண்டு இருப்பவனும் (அரசு) கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நிர்வாணமாக போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மக்களிடம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று இல்லை. முன்பு இருந்த தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தனர். அவர்கள் நாட்டை சொந்தம் கொண்டாடினர். ஆனால் தற்போதைய தலைவர்கள் சொத்துக்களை குவித்து நாட்டையே சொந்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் மார்க்சிய கொள்கைகளை கடைபிடித்து உரிமைகளுக்காக போராட வேண்டும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கவேல், பாலபாரதி, மாவட்ட செயலாளர் பாண்டி, நகர செயலாளர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


Post your comment

Related News
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?
என்ன இப்படி ஆகிட்டீங்க? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படம் இதோ.!
டிசம்பரில் ராஜேஷுடன் களத்தில் இறங்குகிறார் சந்தானம்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட - பிரபல முன்னணி நடிகையை விரட்டியடித்த இயக்குனர்கள்.!
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions