சுதந்திர தினத்திற்கு வி.எஸ்.ஓ.பி.யை ஓபன் பண்ணும் ராஜேஷ்

Bookmark and Share

சுதந்திர தினத்திற்கு வி.எஸ்.ஓ.பி.யை ஓபன் பண்ணும் ராஜேஷ்

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இப்படத்தி ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

மேலும் சந்தானம், முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ‘வி.எஸ்.ஓ.பி’ என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தை ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரித்து வருகிறது. 

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். சமீபத்தில் வெளியான ‘வி.எஸ்.ஓ.பி’ டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது,

“காதல், பிரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா மக்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்” என்று ஆரம்பித்தார் இயக்குனர்.

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.

ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’  மீண்டும் நினைவில் நிறுத்தும்.” எனக் கூறினார் இயக்குனர் ராஜேஷ்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions