காமெடிதான் என்னோட பிராண்ட்! -டைரக்டர் ராஜேஷ்

Bookmark and Share

காமெடிதான் என்னோட பிராண்ட்! -டைரக்டர் ராஜேஷ்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம். தற்போது ஆர்யா-சந்தானம் கூட்டணியை வைத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

அதுவும், ஏற்கனவே இதே ஆர்யா-சந்தானம் கூட்டணியை வைத்து இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே கதை உருவாக்கியிருப்பதாக சொல்லும் அவர், அந்த படத்தில் நயன்தாரா நடித்தது போன்று இந்த படத்தில் தமன்னா நடித்திருப்பதாகவும் சொல்கிறார்.

அதே சாயல் கொண்ட கதை, அதே ஆர்யா, சந்தானம் என்றபோதும் காமெடியில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறேன்.

காமெடி படம் என்பதால் சரக்கு சீன்களும் உள்ளது. இதை யாரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைப்பதல்ல. காமெடி வரவைப்பதற்காக செய்வது. அந்த வகையில் காமெடி நல்லாவே ஒர்க்அவுட்டாகியிருக்கு.

மேலும், என்னோட எல்லா படத்திலேயுமே சந்தானம் இருப்பது பற்றி எல்லாரும் கேட்கிறாங்க. அதுக்கு காரணம், நான் காமெடி கதையை மட்டுமே யோசிக்கிறேன். ஒரு கதை பண்ணும்போதே அவர் மைண்டுல வந்து உட்கார்ந்திடுறாரு.

அதனால் அவர்கூட இன்னொரு ஹீரோவையும் வச்சுத்தான் கதையையே யோசிக்கிறேன். அதனாலதான் சந்தானம் இல்லாமல் என படமே இல்லை என்றாகி விட்டது. அதேமாதிரி, அவரையும் இன்னொரு ஹீரோ மாதிரிதான் நடிக்க வைக்கிறேன்.

இதற்கு என் படங்கள்ல நடிக்கிற ஹீரோக்களும் ஒத்துகிடுறதால இதே ரூட் போய்க்கிட்டே இருக்கு. முக்கியமாக, ராஜேஷ் படம்னால காமெடியா இருக்கும்னுதான் தியேட்டருக்கே வர்றாங்க. அதனால அந்த உடைக்க நானும் விரும்பல என்கிறார் ராஜேஷ்.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions