எழுத்தாளர் ராஜேஷ்குமாரை துரத்தும் சினிமா இயக்குநர்கள்

Bookmark and Share

எழுத்தாளர் ராஜேஷ்குமாரை துரத்தும் சினிமா இயக்குநர்கள்

இன்றைய இயக்குநர்கள் பலருக்கு தங்களுடைய படத்தின் கதையை யோசிக்கும் அளவுக்கு கதைஞானம் குறைவுதான். வசனம் எழுதும் அளவுக்கு அவர்களுக்கு பொறுமையும் இல்லை.

எனவே பிரபல எழுத்தாளர்களை தேடி ஒடுகிறார்கள். அதனால் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு திரையுலகில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ராஜேஷ்குமாரும் சேர்ந்திருக்கிறார். தமிழ் நாவல் உலகில் க்ரைம் கதை மன்னனாக இருப்பவர் ராஜேஷ்குமார். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் ராஜேஷ்குமாரை திரையுலகம் என்ன காரணத்தினாலோ இதுவரை கண்டுகொள்ளாமலே இருந்தது.

இப்போது அவரையும் துரத்த ஆரம்பித்துவிட்டனர் சினிமா இயக்குநர்கள். சரத்குமார் நடிப்பில் வரும் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் ராஜேஷ்குமார்தான்.

அதோடு, பிரபல வாரஇதழ் ஒன்றில் வெளிவந்த வெல்வெட் குற்றங்கள் என்ற ராஜேஷ்குமாரின் தொடர்கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா.

இதற்காக இந்த தொடர்கதை ஆங்கில மொழியாக்கம் செய்யப்படும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காணாமல் போன மலேசியன் விமான சம்பவத்தை மையமாக வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கும் வெல்வெட் குற்றங்கள் தொடர்கதை விரைவில் ஹிந்தி படமாக உருவாகிறது.

இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல, 2000 சதுர அடி சொர்க்கம் என்ற படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராஜேஷ்குமார். அகஸ்டியன் என்பவர் இயக்கும் இப்படம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions