எழுத்தாளர் ராஜேஷ்குமார் பணியாற்றும் 5 படங்கள்!

Bookmark and Share

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பணியாற்றும் 5 படங்கள்!

க்ரைம் நாவல் உலகில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளவர் ராஜேஷ்குமார். இதுவரை 1500 நாவல்கள் எழுதியவர். இப்போது திரையுலகிலும் தன் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இப்போது ஐந்து படங்களுக்கு ராஜேஷ்குமார் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார். நியூட்ரினோ பிரச்னையை மையமாக்கி உருவாகிவரும் 2000 சதுரஅடி சொர்க்கம் என்கிற படம், ஈரம் ,வல்லினம் படங்களின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதிய படம், செம்மரக் கடத்தல் கொலைகளை மையப்படுத்தி உருவாகும் தூக்குமரப் பூக்கள், கதம் கதம் இயக்கி தயாரித்த பாபு தூயவனின் புதியபடம்,  பிரபுதேவா இயக்கவுள்ள  வெல்வெட் குற்றங்கள் நாவலின் கதை அடிப்படையிலான படம் என ஐந்து படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

ஒரு வகையில் கதை எழுதுவதை விட திரைக்கதை எழுதுவது எளிது தான் என்கிறார் ராஜேஷ்குமார். சண்ட மாருதம் படத்தில் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் இணைந்து பணிபுரிந்ததில் திரைக்கதை எழுதுவது தனக்கு பிடிபட்டதாகக் கூறுகிறார். சினிமாவில் எழுத்தாளன் ஏமாற்றப் படுவதாக ஒரு வார இதழில் தொடர் எழுதியவர் எப்படி இப்போது சினிமாவில் இத்தனை படங்களில் இயங்க முடிகிறது? என்று கேட்ட போது"சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் இருக்கிற நல்லவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம்தான். அப்படிச் சிரமப்பட்டு கண்டுபிடித்து நேர்மையானவராகத் தெரியும் சிலரோடுதான் நான் பணி புரிந்து வருகிறேன்.

சினிமாவில் என்ன பிரச்சினை என்றால் தொழில் ரீதியான ரெடிமேட் கதை சொல்லிகள் போலத்தான் எழுத்தாளர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள்.  எழுத்தாளர்கள் என்பவர்கள் சிறுகதை, தொடர்கதை, நாவல் என்று எழுதி தங்களுக்கான வாசகர் வட்டத்தைப் பெற்றிருப்பவர்கள். அவர்களுக்கென ஒரு கௌரவம் இருக்கிறது அதை மதிக்க வேண்டும்.இப்போது தொழில்நுட்ப ரீதியில் சினிமா வளர்ந்திருக்கிறது.

ஆனால் கதை விஷயத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது. அரைத்தமாவையே அரைத்து வருகிறார்கள் எழுத்தாளர்களை பயன்படுத்திக் கொண்டால் சினிமா இன்னும் சிறப்படையும்" என்கிறார். ராஜேஷ்குமார் இப்போது எழுதும் 5 படங்களில் நாவல் கதையும் இருக்கிறதாம் சினிமாவுக்காக புதிதாக எழுதிய கதையும் இருக்கிறதாம்.


Post your comment

Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions