மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்

Bookmark and Share

மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்

மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இன்று கொச்சியில் மரணமடைந்தார். இவருக்கு வயது 41. கல்லீரல் கடுமையாக பாதிப்படைந்ததால் கடந்த வெள்ளியன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்ததால் துரதிர்ஷ்டவசமாக இன்று காலை 11.40 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. 

இவரது புதிய படமான ‘வெட்டா’ நேற்றுதான் கேரளா முழுதும் வெளியானது. ராஜேஷ் பிள்ளை ஹரிபாதில் பிறந்தவர். இவரது மனைவி பெயர் மேகா. ராஜேஷ் பிள்ளைக்கு தந்தையும் இருக்கிறார்.

வெட்டா படத்தின் படப்பிடிப்பின் போதே ராஜேஷ் பிள்ளை பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல சமயங்களில் படப்பிடிப்புக்கு மருத்துவமனையிலிருந்து அவர் நேரடியாக வந்திருக்கிறார். 

ராஜேஷ் பிள்ளை 2005-ம் ஆண்டு ‘ஹிருதயத்தில் சூஷிகன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2-வது படம்தான் ‘டிராபிக்’- இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இருதயத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்வது பற்றிய ஒரு மாறுபட்ட த்ரில்லர் படம். இப்படம் தமிழில் ‘சென்னையில் ஒருநாள்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. 

இவரது உடல் தற்போது பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு ரவிபுரம் இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions