கொம்பன் கார்த்தி போன்று தான் என் ராசாவின் மனசிலே-2 - ராஜ்கிரண்

Bookmark and Share

கொம்பன் கார்த்தி போன்று தான் என் ராசாவின் மனசிலே-2 - ராஜ்கிரண்

தமிழ்த் திரையுலகில் தற்போது மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று பெயர் பெற்றிருப்பவர் ராஜ்கிரண். சமீபத்தில் வெளிவந்த 'கொம்பன்', கடந்த ஆண்டு வெளிவந்த 'மஞ்சப் பை' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.

சிறிய வினியோகஸ்தராக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த ராஜ்கிரண், பின்னர் படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ராமராஜன் நாயகனாக நடித்த இரண்டு படங்களைத் தயாரித்தவர், பின்னர் அவரே நாயகனாக அறிமுகமான 'என் ராசாவின் மனசிலே' படத்தையும் தயாரித்தார்.

அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் 'அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான்' ஆகிய படங்களைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்து இயக்கவும் செய்தார்.

அதன் பின் அவருக்கு அதிக சம்பளத்துடன் நாயகனாக நடிக்க சில வாய்ப்புகள் வந்தன. எனவே, நாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து, “மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே, பொன்னு வெளையிற பூமி” ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.

அதன் பின் அவருக்கு நடிக்கும் வாய்ப்புகளும் குறைந்தன. பின்னர் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா' படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அன்றிலிருந்து இன்று வரை அப்படியே நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் 'கொம்பன்' படத்திற்காக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசும் போது ராஜ்கிரண்  மீண்டும் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.

'என் ராசாவின் மனசிலே' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்றும் யோசித்து வருகிறேன் என்றார். 'என் ராசாவின் மனசிலே' படத்தின் மாயாண்டியின்  மகன் கதாபாத்திரம் இத்தனை வருடங்கள் கழித்து, இப்போது ஏறக்குறைய 'கொம்பன்' கார்த்தி கதாபாத்திரம் போலத்தான் இருக்கும்.

எனவே அந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படத்தை இயக்கலாம் என்றிருக்கிறேன்,” என்றார். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions