இளம் கலைஞர்களுடன் ரஜினி ரிகர்சல்.....!

Bookmark and Share

இளம் கலைஞர்களுடன் ரஜினி ரிகர்சல்.....!

ரஞ்சித் இயக்கத்திலான படத்திற்காக, ரஜினிகாந்த், படக்காட்சிகள் குறித்த ரிகர்சலில் பங்கேற்றதாக வந்துள்ள தகவல், கோலிவுட்டில் பெரும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பணிகளில், ரஞ்சித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அட்டகத்தி படத்தின் மூலம், இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித், கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். முதல்படம் வெற்றிப்படமாக அமையவே, அடுத்ததாக, கார்த்தி நடிப்பில், மெட்ராஸ் படத்தை இயக்கினார். அப்படமும், ரஞ்சித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது.

லிங்கா படம் ஏற்படுத்திய தோல்வியின் காரணமாக, புதுமுக இயக்குநரின் படத்தில் நடிப்பதன் மூலமே, தமிழ்த்திரையுலகில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்று ரஜினி நினைத்திருந்த நிலையில், ரஞ்சித்தின் படங்கள், ரஜினிக்கு புலப்பட்டன. பின் ரஜினி - ரஞ்சித் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

பின் சமீபத்தில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் ரஞ்சித், பட துவக்கத்திற்கு முன்பே, அதுகுறித்த காட்சிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக வொர்க்ஷாப்களை நடத்துவது வழக்கம்.

இந்த வொர்க்ஷாப்களில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு ரிகர்சலில் ஈடுபடுவர். அதுபோலவே, ரஜினி நடிக்க உள்ள பெயரிடப்படாத புதுப்படத்திற்காகவும், வொர்க்ஷாப்பை உருவாக்கி, படக்குழுவினர் ரிகர்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வொர்க்ஷாப்பில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ரஞ்சித், ரஜினியிடம் கேட்டுக்கொண்டிருந்தநிலையில், அதற்கு பதிலளித்திராத ரஜினி, திடீரென்று, அந்த வொர்க்ஷாப்பில் கலந்துகொண்டார். தனது சம்பந்தப்பட்ட காட்சிகளின் ரிகர்சலிலும் ரஜினி பங்கேற்றதாக, படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions