அப்துல்கலாம் உதவியாளருடன் ஆலோசனை: ரஜினி அரசியலில் குதிப்பாரா?

Bookmark and Share

அப்துல்கலாம் உதவியாளருடன் ஆலோசனை: ரஜினி அரசியலில் குதிப்பாரா?

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும், கண்டிப்பாக வரவேண்டும் என்ற விருப்பமும் அவரது ரசிகர்களிடம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அதற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு காலகட்டங்களில் அரசியலில் அவரது பங்களிப்பும் இருந்து வருகிறது.

1996-ல் மூப்பனார் தலைமையில் த.மா.கா. உதயமானது. அப்போது தி.மு.க.- த.மா.கா. கூட்டணி உருவாவதற்கு ரஜினி முக்கிய பங்கு வகித்தார். அப்போது நடைபெற்ற தேர்தலில் அந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது.

ஒருமுறை பா.ஜனதாவுக்கு தனது ஆதரவை வெளிப்படையாகவே அறிவித்தார். இருந்தாலும் அவர் தீவிர அரசியல் பக்கம் திரும்பாமலேயே இருந்து வருகிறார்.

தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு கட்சியும் ‘ரஜினி வாய்ஸ்’-க்காக முயற்சிகள் மேற்கொள்ளும்.

ஆனால் ரஜினி வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை. கடவுள் நம்பிக்கை கொண்ட அவர் ஆண்டவன் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று சொல்லி பிடிகொடுக்காமல் நழுவியே வருகிறார்.

தான் அரசியலுக்கு வருவேன் என்றோ அல்லது வரமாட்டேன் என்றோ உறுதியாக எதுவும் சொல்லாமல் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பைத்தான் உருவாக்கி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் ஆர்வத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

‘என்வழி தனிவழி’, ‘நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற சினிமா ‘பஞ்ச்‘ டயலாக்குகள் தலைவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் படம் வெளியானதும் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்குத்தான் ஒப்பந்தம் ஆனது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் ரஜினியை சந்தித்தார். அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் அவர் பல தலைவர்களை சந்தித்து வருகிறார்.

ரஜினி- பொன்ராஜ் சந்திப்பின்போது அரசியல் தொடர்பான ஆலோசனையே முக்கிய இடம் பெற்றுள்ளது. நதிகள் இணைப்பில் ரஜினி மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். வாஜ்பாய் ஆட்சியின்போது நதிகள் இணைப்பு பற்றிய பேச்சு எழுந்ததும் ஒருகோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார்.

தற்போதும் நதிகள் இணைப்பு, அரசியல் நிலவரங்கள் பற்றி விரிவாக ஆலோசித்து இருக்கிறார்கள்.

தனது அரசியல் ஆர்வத்தின் காரணமாகவே அரசியல் பற்றி மிக ஆழமான சிந்தனைகளுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது ரஜினி அரசியலுக்கு வருவது உதவியாக இருக்கும் என்ற கருத்தை பொன்ராஜ் தெரிவித்து இருக்கிறார்.

அவரிடமும், கடவுள் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே ரஜினி அரசியலுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய தகவல்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. இணைய தளங்களில் பரபரப்பு செய்தியாக இடம் பிடித்துள்ளது.

ரஜினி தற்போது எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார். பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும்.

அதன்பிறகு கபாலி பட டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்த படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார். அந்த படம் முடிந்ததும் அடுத்த வருடம் அவர் அரசியலில் குதிப்பார் என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions