ரஜினி படம் அடுத்த மாதம் ஆரம்பம்!

Bookmark and Share

ரஜினி படம் அடுத்த மாதம் ஆரம்பம்!

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்க உள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் ரஞ்சித் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளராம்.

இந்தப் படத்திற்கான கதை விவாதம் நடந்த போதும், நடிப்புப் பயிற்சி நடந்த போதும் கூட ரஜினிகாந்த் ஆவலாக வந்து கலந்து கொண்டார் என்கிறார்கள்.

சுமார் 100 நாட்கள் வரை நடக்க உள்ள படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மொத்தமாக 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க உள்ளாராம். மலேசியா மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.

ரஜினிகாந்திற்கு ஜோடி இருந்தாலும் அவருடைய வழக்கமான பாணியிலான படமாக இல்லாமல் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். ரஜினிகாந்திற்கு ஜோடி யார் என்பதெல்லாம் கூட முடிவாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால், அதை இன்னும் வெளியில் சொல்லாமலே வைத்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் இந்தப் படம் பற்றிய அடுத்த விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions