ரஜினியின் அடுத்த படம் கேங்ஸ்டர்...?

Bookmark and Share

ரஜினியின் அடுத்த படம் கேங்ஸ்டர்...?

ரஜினி விரைவில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், அந்த படத்திற்கு கேங்ஸ்டர் என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், அப்படத்தின் ஸ்டில்கள் என பல ஸ்டில்கள் தற்போது சமூகவலைதளங்களில் உலவத் தொடகியுள்ளன.

இது உண்மையான ஸ்டில்களா அல்லது இல்லையா என்பது,அப்படக்குழுவினர் தெரிவிக்கும்வரை, இந்த பரபரப்பு அடங்கப்போவதில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லிங்கா படம், விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக கூறி நடத்தி வரும் போராட்டம், ரஜினிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் இருந்து ரஜினியால் இன்னும் மீள முடியவில்லை. அந்த விவகாரம், சீரியல் போல நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில், அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கி பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது உண்மை தான் மற்றும் புரளி என்று செய்திகள் மாறிமாறி வந்து கொண்டிருந்தநிலையில், ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ள நிலையில், படத்திற்கு கேங்ஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், படத்தின் பர்ஸ்ட்லுக்கை போலவே, இந்த ஸ்டில்கள் உள்ளஜ.

ரஜினியின் புதுப்பட ஸ்டில்கள் என சில போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது, அந்த படத்தின் உண்மையான ஸ்டில்களா அல்லது இல்லையா என்பது, அப்படக்குழுவினர் கூறும்போது தான் தெரியும்....


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions