சட்டசபை தேர்தலைப் குறித்து என்ன நினைக்கிறார் ரஜினிகாந்த்?

Bookmark and Share

சட்டசபை தேர்தலைப் குறித்து என்ன நினைக்கிறார் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு மத்திய அரசு கலைத்துறை சேவைக்கான மிக உயரிய பத்ம விபூஷன் விருது வழங்கியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் நேற்று இரவு 11.15 மணிக்கு விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சந்தித்தனர்.

அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த் கூறியதாவது:–

எனக்கு பத்மவிபூஷன் விருது அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசுக்கு நன்றி. இது எனக்கு கால தாமதமாக கிடைத்ததாக நான் கருதவில்லை. தமிழக கலைஞர்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவதில் புறக்கணிப்பதாக நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் வர இருக்கிற தமிழக சட்டசபை தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions