ரஜினி படம் விரைவில் அறிவிப்பு

Bookmark and Share

ரஜினி படம் விரைவில் அறிவிப்பு

“அட்டகத்தி, மெட்ராஸ்” படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக அடுத்து எந்த விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

ஆனால், இயக்குனர் ரஞ்சித்துக்கு கதை விவாதம் செய்வதற்காக தனியாக அலுவலகம் போடப்பட்டு கொடுத்திருப்பதாகவும், உதவியாளர்களுடன் அவர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்தப் படத்தின் அறிவிப்பை அடுத்த வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் யார் ?, படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அநேகமாக அவையனைத்தும் முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

படத்திற்கு இசையமைக்கப் போவது சந்தோஷ் நாராயணன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர், அடுத்த வாரம் ஒரு சுவாரசியமான அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அது ரஜினிகாந்த் படம் பற்றிய அறிவிப்பாகத்தான் இருக்கும் என்றும் பலர் ஆர்வமுடன் காத்துள்ளார்கள். கமல்ஹாசன் அவருடைய அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் வெளியிடுவார் என கோலிவுட்டில் பலமாக பேச்சு அடிபடுகிறது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions