ரஜினியுடன் ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி அனுபவம்!

Bookmark and Share

ரஜினியுடன் ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சி அனுபவம்!

ரஜினியுடன் சுமார் முப்பது ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர் ஜெயராமன். அவரை ரஜினி ஜெயராமன் என்றே அழைப்பார்கள். எப்போதும் வெள்ளை உடையில் ஒயிட் அண்ட் ஒயிட்டில் தான் இருப்பார். ரஜினியைத் தெரிந்த அனைவருக்கும் இந்த ஜெயராமனைத் தெரியும்.  அந்த அளவுக்கு ரஜினி சார்ந்த உலகத்தில் பரிச்சயமானவர்.

ரஜினியின் நல்லது கெட்டது அனைத்திலும் பங்கெடுத்தவர் இந்த ஜெயராமன்.  அவர் இப்போது ரஜினியிடமிருந்து வெளியே வந்து படம் தயாரிக்கிறார்.  தயாரிப்பு எண்ணத்தை ரஜினியிடம் கூறிய போது படத்தின் பட்ஜெட், திரையுலக நடைமுறை, படக்குழுவினர் பற்றியெல்லாம் விசாரித்து கவனமாகச் செய்ய அறிவுரை கூறி வாழ்த்தி அனுப்பினாராம். எது வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லும்படி கூறியிருக்கிறாராம்.

அவரிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது அன்பைத்தவிர என்று கூறுகிற ஜெயராமன்,  நண்பர்கள் இன்னொரு ஜெயராமன், பிருத்திவிராஜ், ராஜேந்திரன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு ஜேபிஆர் பிலிம்ஸ் சார்பில் கிருமி என்கிற ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.  கிருமி புதிய படக்குழுவினரை வைத்து உருவாகியுள்ளது.  கதிர் நாயகனாக நடித்துள்ளார்.  நாயகி ரேஷ்மி மேனன். இயக்கம் அனுசரண். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து ரஜினி திரும்பியபோது பார்க்கப்போன இவரைப் பார்த்த ரஜினி கண் கலங்கி அழுதே விட்டாராம்.  இவரும் கண்ணீர் விட்டு அழ, அங்கே வார்த்தைகளுக்கு இடமில்லாமல் அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது என்னைப் பார்த்ததும் பெயர் சொல்லி அருகில் அழைத்தார், உற்றுப் பார்த்தார்.  

பேசவே இல்லை, எனக்கும் எதுவும் பேசவே தோன்றவில்லை. கண்கள் பார்த்ததும் இருவருக்குமே பழைய நினைவுகள் பழகிய நினைவுகள் நினைவில் வர பேச்சே வரவில்லை. மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது.  கண் கலங்கியவர் அழுதே விட்டார். அவர் அழுததைப் பார்த்ததும் என்னால் தாங்க முடியவில்லை நானும் அழுது விட்டேன். அது சொற்களால் விளக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம் அது.  அதை விவரிக்க முடியாது உணர மட்டுமே முடியும். என்றார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions