ஜெயலலிதா பதவியேற்பு விழா - ரஜினி பங்கேற்பு

Bookmark and Share

ஜெயலலிதா பதவியேற்பு விழா - ரஜினி பங்கேற்பு

ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார். சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றதால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஜெயலலிதா.

இதனையடுத்து முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றார். இந்நிலையில், சமீபத்திலிருந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார், அதுமட்டுமின்றி அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க எந்த தடையும் இல்லை என கோர்ட் உத்தரவிட்டது.

முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் நேற்று தனது பதவியை ராஜினமா செய்தார். ஜெயலலிதாவை முதல்வராக்க அதிமுக கூட்டத்தில் ஒருமனதமாக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 217 நாட்களாக வீட்டிலேயே இருந்த ஜெயலலிதா நேற்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அவருக்கு வழி நெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து இன்று முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அவருடன் சேர்ந்து 28 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா சிறப்பாக நடந்தது.

இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ரஜினி மட்டுமின்றி, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், மூத்த இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions