ரஜினிதான் என்றும் சூப்பர் ஸ்டார்: வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு தயாரிப்பாளர் புகழாரம்

Bookmark and Share

ரஜினிதான் என்றும் சூப்பர் ஸ்டார்: வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு தயாரிப்பாளர் புகழாரம்

புதுமுக இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ படம் மும்பை திரைப்பட விழா, ஜிம்பாப்வே திரைப்பட விழா, இந்தியன் பனோரமா, சென்னை சர்வதே திரைப்பட விழா ஆகியவற்றில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

இதற்கெல்லாம் மணிமகுடமாய் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றுள்ளது.

இதையடுத்து, இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷூக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தயாரிப்பாளர் சதீஷை மட்டுமல்ல, படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெருமிதத்திற்கும், பெருமகிழ்ச்சிக்கும் கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் இயக்குனர் பிரம்மா இருவரையும் தொடர்பு கொண்டு தேசிய விருது பெற்றதற்காக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சதீஷ் கூறும்போது, ‘இந்த நொடிப் பொழுது மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions