இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து ”தல” தான்..!

Bookmark and Share

இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து ”தல” தான்..!

தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் இணைந்து நடிக்காததற்கு முக்கிய காரணம் அவர்களின் சம்பளமே.

தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்திற்கே பெரிய தொகையை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் புதிய சம்பளப் பட்டியல் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இதில் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இப்போதும் ரஜினிகாந்த்தே முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.45 கோடி முதல் ரூ.50 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.

இவரைத் தொடர்ந்து அதிக சம்பளம் வாங்குவது அஜித். இவர் ஒருபடத்திற்கு 25 கோடியை சம்பளமாக பெறுகிறார். இவருக்கு அடுத்து கமல் ரூ.20 கோடி சம்பளம் பெறுகிறார். இவர்களைத் அடுத்து விஜய் மற்றும் சூர்யா தலா ரூ.20 கோடி பெறுகின்றனர்.

விக்ரம் ரூ.12 கோடியும், தனுஷ் ரூ.10 கோடியும், கார்த்தி ரூ. 6 கோடியும், விஷால் ரூ.5 கோடியும், சிம்பு ரூ.4 கோடியும், ஆர்யா ரூ.3 கோடியும், ஜெயம்ரவி ரூ.3 கோடியும், ஜீவா ரூ. 2.5 கோடியும், விஜய்சேதுபதி ரூ.2 கோடியும் பெறுகின்றனர்.

மலையாள சினிமாவில் மோகன்லால் ரூ. 4 கோடியை சம்பளமாக பெறுகிறார். மம்மூட்டி ரூ.3.5 முதல் 4 கோடியும், திலீப் ரூ. 2 கோடியும், பிருத்விராஜ் ரூ.1.5 கோடியும் பெறுகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions