ரஜினியும் அஜித்தும் எனக்கு கடவுள் மாதிரி - பிரபல நடிகை நெகிழ்ச்சி!

Bookmark and Share

ரஜினியும் அஜித்தும் எனக்கு கடவுள் மாதிரி - பிரபல நடிகை நெகிழ்ச்சி!

காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானுவின் கேரக்டரும், திலோத்தமா பாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்தப் படத்துடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபாடு செலுத்திய மானு சிங்கப்பூரில் செட்டிலானார்.

மீண்டும் ஜெயம் ரவியின் அண்ணனும், இயக்குநருமான மோகன் ராஜா ஹீரோவாக நடித்த என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நாயகியாக நடித்தார். இதனிடையே ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் இருந்த போது அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன் அஜித் இருவரும் கடவுள் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions