எந்திரன்-2 வில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் அக்ஷய்குமார்

Bookmark and Share

எந்திரன்-2 வில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கும் அக்ஷய்குமார்

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தற்போது இரண்டாம் கட்டமாக டெல்லியில் உள்ள ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். இப்படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் உபயோகிக்கக்கூடாது,

கேமரா பயன்படுத்தக்கூடாது என கடுமையான விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். அதனால், இப்படத்தில் யார் எந்த மாதிரி தோற்றத்தில் நடிக்கிறார்கள் என்பது படம் தொடங்கியதுமுதல் இன்று வரை ரகசியமாக இருந்து வந்தது. 

இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அக்ஷய்குமார், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினர்.

அப்போது, அக்ஷய்குமார் வித்தியாமான தோற்றத்துடன் காட்சியளித்தார். இவரது தோற்றம் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பது அக்ஷய்குமார்தானா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவரது தோற்றத்த்தை மாற்றியிருக்கிறார்கள். 

இதுவரை ரகசியமாக காக்கப்பட்ட இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்புகைப்படத்தை யார் வெளியிட்டார்கள் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இனிமேல், இப்படத்தின் ரகசியத்தை காக்க மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions