அனிருத் மீது கடும் கோபத்தில் ரஜினி!

Bookmark and Share

அனிருத் மீது கடும் கோபத்தில் ரஜினி!

ரஜினியாக இருப்பது ரொம்பவே கஷ்டம் என்பார்கள். காரணம் அவர் அமர்ந்திருக்கும் இடம் அப்படி. ரஜினி இப்படி ஒரு சிகரத்தில் இருக்கிறார்... அவரது நெருங்கிய உறவினர்களான நாம் செய்யும் எந்த செயலும் அவரைக் கடுமையாக, அதுவும் உடனடியாக பாதிக்குமே என்ற நினைப்பு அவரது உறவினர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பல தீவிர ரசிகர்களுக்கு ரஜினியின் குடும்பத்தார் செய்யும் பல செயல்களில் உடன்பாடு இருப்பதில்லை.

உதாரணம், தனுஷ், அவர் தந்தை கஸ்தூரிராஜா, இப்போது ரஜினியின் மைத்துனர் மகன் அனிருத். முதல் முதலில் அனிருத் கேவலப்பட்டது, தன்னைவிட பல வயது மூத்த நடிகை ஆன்ட்ரியாவின் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்த படங்களை வெளியிட்ட போதுதான்.

அப்போதே அனிருத்தை அழைத்து, 'பெரிய அளவுக்கு வரவேண்டிய பையன் நீ... பாத்து நடந்துக்கோ' என்று அட்வைஸ் பண்ணதாக செய்தி வெளியானது. அடுத்து ஒரு படுமோசமான ஆங்கிலப் பாட்டு ஒன்றை அவரே வெளியிட்டார்.

இந்த பீப் பாட்டை விட மோசமான ஆபாசப் பாட்டு அது. வார்த்தைக்கு வார்த்தை 'Fu...g' என்று ஒலித்த அந்தப் பாடலை வெளியிட்டதே அனிருத்தான். உடனடியாக போலீஸ் சம்மன் பறந்தது. ஓடோடி வந்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ரவி ராகவேந்தர். கமிஷனரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பையனை மீட்டு வந்தார்.

அன்றே அனிருத்தை அழைத்த ரஜினி, 'நான் முன்பே சொல்லிவிட்டேன். நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கலாம். ஒழுக்கமாக நடந்து கொள்ளாவிட்டால் இப்போது கிடைத்துள்ள வாழ்க்கையே பாழாகிவிடும்' என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

அதெல்லாம் இந்த பீப் பாய் காதில் ஏறவே இல்லை என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இந்த பீப் பாட்டு விவகாரம் பரபரப்பு கிளப்பிய போது ரஜினி சென்னையில்தான் இருந்தார்.

லைகா தயாரிக்கும் 2.ஓ படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றவர், பீப் விஷயம் கேள்விப்பட்டு கடும் கோபமடைந்ததாராம். அடுத்து தன் குடும்பத்தினருக்கு அவர் போட்ட உத்தரவு.. 'எக்காரணம் கொண்டும் அனிருத்தை வீட்டுப் பக்கம் வரவிடாதீர்கள்' என்பதுதான். இதை அனிருத் வீட்டுக்கும் சொல்லிவிட, அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்களாம்.

அடுத்து தன் மகள்களை அழைத்து, "அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிருங்கள். வேறு இசையமைப்பாளர்களை அமர்த்திக் கொள்ளுங்கள்" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம். இதில் ரஜினி மருமகன் தனுஷுக்குதான் பெரும் சங்கடமாம்.

அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளாராம். மாமனார் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனிருத்தை மாற்றுவாரா... அல்லது பீப் பாயை கட்டிக் கொண்டு அழுவாரா.. பார்க்கலாம்!


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions