
ரஜினிகாந்த்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமயமலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ, பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் அடிக்கடி சென்று வருவார்.
தற்போது, இமயமலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருவதாகவுள்ளார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries