மழையால் தாமதமான எந்திரன் 2 அறிவிப்பு

Bookmark and Share

மழையால் தாமதமான எந்திரன் 2 அறிவிப்பு

தற்போது ‘கபாலி’ படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது.

அடுத்துக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் டைக்டர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘எந்திரன் – 2’ படத்துக்கான பணிகளில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இதற்காக ரஜினியும் அவருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரஜினிக்கான மேக்கப் ‘டெஸ்ட்’ நடந்து வருகிறது. இதில் ஹாலிவுட் மேக்கப் நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
எந்திரன் – 2 படத்துக்கான கிராபிக்ஸ் மற்றும தொழில் நுட்ப பணிகள் நடைபெற இருக்கும் ஸ்டூடியோக்களையும் ரஜினி பார்வையிடுகிறார்.

டிசம்பர் 12–ந் தேதி ரஜினியின் 65–வது பிறந்த நாள் அன்றைய தினத்தில் ‘எந்திரன் – 2’ படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட ஷங்கர் திட்டமிட்டிருந்தார்.
தற்போது பலத்த மழை வெள்ளம் காரணமாக சென்னை நகரம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. எனவே ‘எந்திரன் – 2’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 18–ந் தேதி படத்தின் தொடக்க விழாவும் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!! 2.0'வை விட பிரம்மாண்டமா?
ரஜினியின் 2.o படம் குறித்த முக்கிய தகவல் வெளிவந்தது!
எந்திரன்-2 பாகத்தின் VFX-க்காக மட்டுமே 100 கோடியை செலவு செய்யும் லைக்கா!
சூப்பர் ஸ்டாரின் எந்திரன்-2 ரிலீஸ் தேதி வெளியானது!
டெல்லி ஷெட்யூல் முடிந்தது சென்னையில் 2.0 ஷூட்டிங்
எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: அபராதம் கட்ட ஐகோர்ட்டு உத்தரவு!
2.o படத்துக்கான இரண்டு பாடல்கள் தயார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions