சூப்பர் ஸ்டாரின் எந்திரன்-2 ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரின் எந்திரன்-2 ரிலீஸ் தேதி வெளியானது!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியாவிலேயே அதிக செலவில் தயாராகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் இந்தி நடிகர் அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணிபுரிகிறார்கள். நவீன தொழில்நுட்பத்துடன் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன.

தற்போது சென்னை, டெல்லியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்து ‘2.ஓ’ படக்குழுவினர் மொராக்கோ, பொலிவியா நாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர். அங்கு பாடல் காட்சிகளும், வேறுசில காட்சிகளும் படமாக்குகின்றனர். படப்பிடிப்பு நடைபெறும்போதே கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப பணிகளையும் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் (2017) தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் மே மாதத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை துரிதமாக நடத்தி முடித்து, தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions