எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: அபராதம் கட்ட ஐகோர்ட்டு உத்தரவு!

Bookmark and Share

எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: அபராதம் கட்ட ஐகோர்ட்டு உத்தரவு!

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘எந்திரன்’.

இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன்.

அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கிற்கு இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை ஒரு தலைபட்சமாக விசாரிக்க ஐகோர்ட்டு கடந்த ஆண்டு முடிவு செய்து, ஆரூர் தமிழ்நாடன் தரப்பில் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘இந்த பதில் மனு 5 ஆண்டுகள் காலதாமதமாக தாக்கல் செய்வதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.25 ஆயிரம் விதிக்கிறேன்.

இந்த தொகையை மானாமதுரையில் உள்ள தொழுநோய் சிகிச்சை மையத்துக்கு வழங்கவேண்டும். விசாரணையை வருகிற ஜூன் மாதம் 8-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions