ரஜினியின் கெட்டப்பில் உருவாகும் கஜினிகாந்த்.!

Bookmark and Share

ரஜினியின் கெட்டப்பில் உருவாகும் கஜினிகாந்த்.!

கவுதம் கார்த்திக்கை வைத்து ஹரஹர மகாதேவகி படத்தை இயக்கி வெற்றி கண்டவர் சந்தோஷ் பி ஜெயக்குமார், இவர் தற்போது மீண்டும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை எடுத்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர், இந்த படத்தையும் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நேற்று ஆர்யாவின் பிறந்தநாள் மற்றும் இன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக நள்ளிரவில் சூர்யா இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

 அந்த புகைப்படத்தில் ஆர்யா வேட்டி இல்லாமல் சட்டை துண்டுடன் ஒரு கையில் பாரதியார் புத்தகம் மற்றொரு கையில் கேரியர் பாக்ஸை வைத்து கொண்டு இருப்பது தர்மத்தின் தலைவன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

 இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையேயான படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions