ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா

Bookmark and Share

ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மோகன்லால்’. நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையான ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை குடும்பப் பின்னணியில் சொன்ன இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. படத்தில் மோகன்லாலின் ரசிகையாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றது.

இந்த படத்தை ஜோதிகாவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடுகிறார்கள். மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகையாக ஜோதிகாவை மாற்றவிருக்கிறார்கள். இதற்காக ‘ரஜினி செல்வி’ என்ற தலைப்பும் பரிசீலனையில் இருக்கிறது.

மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘ஹெள ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக்கில் ஜுன் மாதம் முதல் நடிக்கவிருக்கிறார்.

அந்த படம் முடிந்த பிறகு ‘ரஜினி செல்வி’ படம் துவங்கலாம். ஜோதிகா இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துவருகிறார்.


Post your comment





Related News
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.!
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? - நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
நாச்சியார் டீசரில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா
பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions