தேர்தல் பிரசாரத்தில் ரஜினியின் கபாலி டீசர்!

Bookmark and Share

தேர்தல் பிரசாரத்தில் ரஜினியின் கபாலி டீசர்!

சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளும், அதிரடி வசனங்களும் இப்போது அரசியல் வாதிகளை கேலி, கிண்டல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

நகைச்சுவை நடிகர்– நடிகைகளின் காட்சிகளை அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு வாட்ஸ்–அப்பில் பரவவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோல் திரைப்பட வசனங்களையும் அரசியலில் தொடர்புபடுத்தி வெளியிடுகிறார்கள்.

இப்போது தேர்தல் நேரம் என்பதால் சினிமா காமெடிகளை அரசியலாக்கி பேஸ்புக், வாட்ஸ்–அப்பில் பரவவிடுகிறார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு காமெடிகளை அரசியல் நிகழ்ச்சிகளுடன் இணைத்து வெளியிடுகிறார்கள்.

ரஜினி நடித்துள்ள கபாலி பட டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ரஜினி பேசும் வசனத்தை தி.மு.க.வினர் தங்களுக்கு சாதகமான வசனங்களை சேர்த்து தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

ரஜினி கம்பீரமாக நடந்து வருகிறார். அப்போது வில்லன் யாருடா கபாலி என்று கேட்க ரஜினி, ‘‘கபாலி என்றால் சினிமாவில்’’ நம்பியார் ‘கபாலி’ என்று அழைத்தவுடன் எஜமான் என்று கைகட்டி அடியாளா வந்து கூனி குருகி நிற்பானே அவன் என்று நினைத்தாயா? இது கபாலிடா....!’’ என்று வசனம் பேசுவதாக வருகிறது.

இந்த வசனத்தை ‘‘யாருடா தி.மு.க.... தேர்தல்ல மோதிப்பாரு?’’ என்று வில்லன் கேட்க அதற்கு ரஜினி, ‘‘வெள்ளம் வந்தப்ப கூட ஹெலிகாப்டர்ல இருந்து பாத்துக்கிட்டு, அம்மான்னு சொல்லிக்கிட்டு அமைச்சர்கள் மாதிரி கூனி குறுகி இருப்பாங்கன்னு பார்த்தியா... இது தி.மு.க.டா...’’ என்று வசனத்தை மாற்றி ரஜினி காட்சியை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பரவவிட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு ரஜினியின் கபாலி டீசர் பயன்படுத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வினர் இந்த ‘டீசரை’ வெளியிட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதை தி.மு.க. மறுத்து இருக்கிறது.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions