தளபதி படம் மாதிரி பண்ணிட்டு அடுத்த ரஜினின்னு சொல்லுங்க: ரசிகர்கள் அதகளம்

Bookmark and Share

தளபதி படம் மாதிரி பண்ணிட்டு அடுத்த ரஜினின்னு சொல்லுங்க: ரசிகர்கள் அதகளம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலும் பெரும் வெற்றியை கொடுத்த படம் "தளபதி".

கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் இடையிலான நட்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது படம் இந்தப்  படம். அன்று ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்த ரஜினி படத்தின் கதைக்காக  தன் இமேஜை பெரிய அளவில் விட்டுக்கொடுத்து நடித்த படம் என சொல்லப்பட்டது.

காதலித்த பெண்ணை, மனதுக்குள் வலித்தாலும்  "ஜஸ்ட் லைக் தட்"  விட்டுக்கொடுப்பது, தன்னால்  விதவையான  பெண்ணைத் திருமணம் செய்வது எனப் பலவாறு இறங்கி நடித்திருந்தார் ரஜினி.

படம்  வெளியானவுடன்  மம்முட்டி என்கிற நடிப்பு அசுரனையே வெள்ளந்தியும்,முரட்டுத்தனமுமான தனது பாத்திரத்தின் மூலம் தூக்கிச்  சாப்பிட்டிருந்தார்.   "ரஜினி என்கிற சிங்கத்தை சின்னக்கூண்டில் அடைத்து வைத்திருந்தோம். தளபதியின் மூலம் அது வெளிவந்துள்ளது" 

அந்த தளபதி வெளியாகி நேற்றுடன் 24 ஆண்டு நிறைவானதையொட்டி  டிவிட்டரில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினார்கள். அதில் வெளியான சில டிவிட்டுகள். 

'தளபதி' படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு 'கபாலி'க்கும் இருப்பதுதான் ரஜினி "காந்தம்" 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions