ரசிகர்களே கண்ட்ரோல் ப்ளீஸ்'! கபாலி டீமின் வேண்டுகோள் இது!!

Bookmark and Share

ரசிகர்களே கண்ட்ரோல் ப்ளீஸ்'! கபாலி டீமின் வேண்டுகோள் இது!!

ரஜினி மலேசியா போனதும் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட காட்சிகள், ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொண்டது போன்ற ஸ்டில்கள் ஆயிரக் கணக்கில் வெளியாகி வருகின்றன.

இவை ரசிகர்களை ஒருபக்கம் பரவசப்படுத்தினாலும், இந்த அளவு படங்கள் வெளியாவது படத்தை பாதிக்குமே என்ற கவலை படக்குழுவினருக்கு வந்துவிட்டது.
‘கபாலி' படத்தின் கதை, கதாபாத்திரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.

கதை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று படக்குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மலேசியாவில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ரஜினிகாந்த் தங்கும் வீடு, தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள், வில்லன் கூட்டத்தினரின் ரகசிய மாளிகைகள் என விதவிதமான அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இந்த அரங்குக்குள் வருபவர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரசிகர்கள், வெளியாட்கள் உள்ளே நுழையாமல் இருக்க வாசலில் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பையும் மீறி ‘கபாலி' படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங் களை செல்போனில் பதிவு செய்து ஆர்வக் கோளாறில் வெளியிட்டுவிடுகிறார்கள்.

வில்லன்களிடம் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது, மலேசிய போலீசார் மத்தியில் கைதியாக நிற்கும் காட்சி போன்றவை இணைய தளங்களில் பரவி உள்ளன.

இதன் மூலம் ரகசியமாக இருந்த ‘கபாலி' ரஜினிகாந்தின் முழு தோற்றமும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. போதாக்குறைக்கு பிரபல வார இதழ்கள் வேறு தங்கள் பங்குக்கு முக்கிய ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றன.

துணை நடிகர், நடிகைகள் ரஜினியை செல்போன்களில் படம் எடுத்து இணைய தளங்களில் பரப்புவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions