ரஞ்சித்தை பார்க்கும்போது பாலச்சந்தர் ஞாபகம் வருகிறது: ரஜினி நெகிழ்ச்சி

Bookmark and Share

ரஞ்சித்தை பார்க்கும்போது பாலச்சந்தர் ஞாபகம் வருகிறது: ரஜினி நெகிழ்ச்சி

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சரித்திர சாதனைகளை படைத்து வருகிறது. ‘கபாலி’ படம் மூலம் ரஜினி ரசிகர்களை எப்படி திருப்திப்படுத்துவது என்கிற உதறலோடு இருந்த இயக்குனர் பா.ரஞ்சித், ‘கபாலி’ டீசரை தயார் செய்ததுடன் போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினியிடம் காட்டியுள்ளார்.

ரஜினி என்ன சொல்வாரோ? என்ற பதைபதைப்பேடு இருந்த சமயத்தில் ரஜினியுடன் ‘கபாலி’ டீசரை அருகில் இருந்து பார்த்த சௌந்தர்யா ‘கபாலிடா’ என்று ரஜினி சொன்னதும் துள்ளிக் குதித்து கைதட்ட ஆரம்பித்தாராம்.

அப்போது, ரஜினியின் முகத்தில் மிகவும் பரவசம் ஏற்பட்டதாம். பின்னர் தயாரிப்பாளர் தாணுவிடம், ‘என்ன தாணு... இப்படித்தான் வரும்னு நினைச்சிருந்தேன். சும்மா அப்படியே வந்துருக்கு’ என்று உணர்ச்சி பெருக்குடன் சொல்லி சிரித்தாராம்.

பின்னர் ரஜினி ரஞ்சித்தை பற்றி சொன்னதுதான் பெரிய ஹைலைட்டாக அமைந்ததாம். முன்னாடி எல்லாம் பாலச்சந்தர் சார் என்னை நடிக்க வச்சி வேலை வாங்குவார்.

அதன்பிறகு நான் நடிச்ச படங்களில் எல்லாம் டைரக்டர்கள் என்ன சொன்னார்களோ அதை கேட்டு அப்படியே நடிச்சேன். அவ்வளவுதான். இப்போ ‘கபாலி’யில் என்னிடம் ரஞ்சித் வேலை வாங்கியதை பார்த்தபொழுது எனக்கு பாலச்சந்தர் ஞாபகம் வந்துவிட்டது என்று நெகிழ்வோடு சொன்னாராம்.

ரஜினியிடமிருந்து இப்படியொரு பாராட்டு கிடைத்தது இயக்குனர் ரஞ்சித்தை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions