ரஜினியின் கபாலி படத்தை வாங்கிய பிரபல முன்னணி நிறுவனம்!

Bookmark and Share

ரஜினியின் கபாலி படத்தை வாங்கிய பிரபல முன்னணி நிறுவனம்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஒருவழியாக ஜுலை 22-ந் தேதி வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, படத்துக்கான புரோமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் வாங்கியுள்ளார். அவர் தனது ஏபிஐ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாங்கி இதை சிங்கப்பூரில் வெளியிடுகிறார்.

இதுவரை எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவுக்கு ‘கபாலி’ படம் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது. இது படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions