கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது

Bookmark and Share

கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது

ரஜினி நடிப்பில் வருகிற ஜுலை 22-ந் தேதி பிரம்மாண்ட வெளிவரவிருக்கும் ‘கபாலி’ படத்தை உலக சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் ரஜினி கபாலீஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபாலீஸ்வரன் என்ற பெயரையே படத்தில் கபாலி என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ராதிகா ஆப்தேவின் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ராதிகா ஆப்தே ‘குமுதவள்ளி’ என்ற பெயரில் நடித்துள்ளார். இதை, இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். கபாலியின் நெஞ்சில் குமுதவள்ளி இடம்பெற்றிருப்பதுபோல புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இப்படத்தில் ரஜினி-ராதிகா ஆப்தே உடன் தன்ஷிகா, கலையரசன், நாசர், கிஷோர், ரித்விகா, ஜான் விஜய், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions