கபாலியுடன் இணைந்த பிரபல செல்போன் நிறுவனம்!

Bookmark and Share

 கபாலியுடன் இணைந்த பிரபல செல்போன் நிறுவனம்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தை இந்தியா மட்டுமில்லாது உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இப்படத்தின் புரோமோஷன்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா விமான நிறுவனம், அந்த நிறுவனத்தின் ஒரு விமானத்தில் ‘கபாலி’ படத்தின் போஸ்டரை ஒட்டி, படத்திற்கு மிகப்பெரிய புரோமோஷன் செய்திருந்தது. தற்போது, ‘கபாலி’ படத்துடன் பிரபல செல்போன் நிறுவனமான ஏர்டெல்லும் கைகோர்த்துள்ளது. 

ஏர்டெல் செல்போன் நிறுவனம் தமிழகத்தில் நிறைய வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது ‘கபாலி’யுடன் கைகோர்த்துள்ளதால், தனது வாடிக்கையாளர்களுக்கு ‘கபாலி’ படத்திற்காக பிரத்யேமாக புதுப்புது திட்டங்களை அறிவிக்கவுள்ளது. ‘கபாலி’ சிம் கார்டு, ‘கபாலி’ ரீசார்ஜ் பேக் ஆகியவை அவற்றில் அடங்கும்.

இந்த புதிய திட்டங்களை பெறும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரஜினிக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ். செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவ்வாறு ரசிகர்களிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.-களை ஒரு தொகுப்பாக எடுத்து புத்தக வடிவில் அச்சடித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நினைவு பரிசாகவும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

ஏர்டெல் நிறுவனம் ‘கபாலி’ படத்திற்காக அறிவித்துள்ள இந்த புதிய திட்டங்கள் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும் தற்போது ‘கபாலி’ படத்தின் மல்டிபிளக்ஸ் பார்ட்னராக கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions