கபாலி படத்திற்கு தடை!

Bookmark and Share

கபாலி படத்திற்கு தடை!

உலகம் முழுவதும் ஜூலை 22-ஆம் தேதி கபாலி திரைப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மலேசிய திரையரங்குகளில் டிக்கெட்டுகள் கூட விநியோகம் செய்துவிட்டனர்.

இந்நிலையில், கபாலி படத்தை கனடாவில் உள்ள திரையரங்கத்தினர் வெளியிடமாட்டோம் என தெரிவித்துள்ளனர். காரணம், சென்ற முறை தெறி படத்தை வெளியிட்டபோது, இரண்டு விநியோகஸ்தர் கோஸ்டிகளுக்குள் சண்டை எழுந்து திரையரங்கை அடித்து நொறுக்கினர்.

இதேபோல் இந்த முறையும் கபாலி படத்தை யார் வாங்கி வெளியிடுவது என போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், படத்தை வெளியிட்டால் திரையரங்கை, மீண்டும் அடித்து நொறுக்கி விடுவார்கள் என திரையரங்கத்தினர் கபாலி படத்தை வெளியிட தடை போட்டுள்ளனர்.

பொதுவாக தமிழ் படத்திற்கு தடை, போராட்டம் என்பது தமிழ்நாட்டில் தான் முதலில் துவங்கும். ஆனால், தற்பொழுது கனடாவில் துவங்கியுள்ளது. இதனால் மற்ற நாடுகளில் ரிலீஸ் பாதிக்குமா? அல்லது விநியோகஸ்தர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு படம் ரிலீஸ் ஆகுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions