ரசிகர்களின் அட்டகாசம்; சூப்பர் ஸ்டார் போட்ட ரகசிய உத்தரவு

Bookmark and Share

ரசிகர்களின் அட்டகாசம்; சூப்பர் ஸ்டார் போட்ட ரகசிய உத்தரவு

பெரும்பாலும் ரஜினி நடிக்கும் படத்தின்  எந்தவொரு செய்தியும் அப்படம் படப்பிடிப்பு நிலையிலிருக்கும்போது ஒருவரிச் செய்தியாகக் கிடைப்பதுகூட கடினம் தான் அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படும். ஆனால் தற்போதைய நிலைமையோ தலைகீழாக மாறியுள்ளது..

ரஜினி தற்போது நடித்து வரும் கபாலி படத்தைப் பொருத்தமட்டில் படம் ரஞ்சித்தின் கேமராவில் ஏறியதோ இல்லையோ, மலேசியாவிலுள்ள மக்கள் பாதிபேரின் செல்போனில் ஏறிவிட்டது. இப்படம் படமாகும் போதே அந்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகிவிடுகிறது.

ரஜினி தங்கும் ஹோட்டல், செல்லும் கார், அணியும் உடை என எதையும் விட்டுவைக்கவில்லை, மலேசிய மக்கள். அனைத்தையும் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். ரஜினி ரசிகர்களும் இந்த படங்களை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ''இவ்வாறு செய்ய வேண்டாம்'' என ரஜினி மகள் ஐஸ்வர்யா, கலையரசன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படியே போனால் மக்கள் படத்தில் பார்க்க எந்த சுவாரஸ்யமும் இருக்கப்போவதில்லை என உணர்ந்துகொண்ட படக்குழுவும், ரஜினியும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை ரகசியமாக வைத்திருக்க  மலேசிய பாதுகாப்பு வட்டத்திற்கு உத்தரவிட்டுள்ளனராம்.

ரசிகர்களை படப்பிடிப்பில் சந்திப்பதைத் தவிர்த்து தான் தங்கியிருக்கும் இடத்தில் மட்டுமே சந்திப்பது எனவும் ரஜினி முடிவெடுத்துள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துகொள்ளவும் முடிவெடுத்துள்ளனர்.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions