ரஜினியின் கபாலி பட பெயருக்கு சிக்கல்

Bookmark and Share

ரஜினியின் கபாலி பட பெயருக்கு சிக்கல்

ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு காளி, கண்ணபிரான், கபாலி என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக இந்த படத்துக்கு கபாலி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதன் இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டு இருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் 17–ந்தேதி மலேசியாவில் தொடங்குகிறது. அதன்பிறகு சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினியின் புதிய படத்துக்கு 'கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த பெயருக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 'கபாலி' பெயரில் ஏற்கனவே நான் படம் எடுத்து வருகிறேன் என்று மைசூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தெரிவித்து உள்ளார்.

ரஜினியின் புதுப்படம் பெயர் அறிவிக்கப்பட்ட தகவல் வெளியான உடனே அவர் எடுத்த படம் பற்றிய ஆதாரங்கள், அவர் நடித்த காட்சிகள், இசை வெளியிட்டு விழா படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதுபற்றி சிவக்குமார் கூறி இருப்பதாவது:–

'கபாலி' என்ற பெயரில் நான் நடித்துக்கொண்டிருக்கும் படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த படத்தை நானே தயாரித்து வருகிறேன். காவ்யா என்பவர் ஜோடியாக நடிக்கிறார். கடந்த மாதம் கூட சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.

பணப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக படம் முடிவடையாமல் இருக்கிறது. இதன் இசை வெளியிட்டு விழா 2012–ம் ஆண்டிலேயே நடந்து விட்டது. சிவா பிக்கர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பாளர் சங்கத்தில் எனது படத்தின் தலைப்பை 'கபாலி' என்று பதிவு செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படத்தின் பெயரை பதிவு செய்தாலும் அதை முறைப்படி புதுப்பிக்காததால் ரஜினி படத்துக்கு கபாலி பெயர் சூட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மைசூர் சிவக்குமார் கிளப்பியுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions