கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!

Bookmark and Share

கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் தமிழகத்தில் இன்னும் சில மணிநேரங்களில் திரையை எட்டவுள்ளது.

ஆனால் மலேசியாவில் இப்படம் ஒரு மணிநேரத்துக்கு முன்பே வெளியாகிவிட்டது. இந்த பிரீமியர் ஷோவில் நடிகை தன்ஷிகா, இயக்குனர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரீமியர் ஷோ திரையிடப்பட்ட ஏரியாவை பார்க்கும்போது இது மலேசியாவா அல்லது தமிழ்நாடா என சந்தேகம் வருமளவு கூட்டம் அலைமோதுகிறதாம். இதன்மூலம் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் எனும் சாதனையை கபாலி நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions