ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்

Bookmark and Share

ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அரசியல் பயணத்தை துவங்கி விட்டனர். இருவரின் அரசியல் பயணம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து இருந்தார்.

‘நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌ஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது.

நம்முடைய முகநூல் பக்கத்தைப் பார்த்தாலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும். ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள்.

அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள்.

இந்த வி‌ஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். நான் அவர்களுடைய படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions