முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!

Bookmark and Share

முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர், இவரது நடிப்பில் வெளியாகிய பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளன.
ஆனால் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவிய சில படங்களும் உள்ளன, அவை இதோ உங்களுக்காக 
லிங்கா:
ரஜினியின் நடிப்பில் வெளியான லிங்கா படம் மிக பெரிய தோல்வியை தழுவியது, ரஜினியின் திரைப்பயணத்தில் மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படமும் இது தான்.
புலி:
எப்போதும் பாயும் புலியாகவே வெற்றி படங்களை கொடுத்து வந்த தளபதி விஜய்க்கு எதிர்ப்பாராத விதமாக புலி படம் நஷ்டத்தையும் தோல்வியையும் கொடுத்தது.
உத்தம வில்லன்:
தமிழ் சினிமாவிற்கு பல தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன், இவர் அதிகம் ரிஸ்க் எடுத்து வெளியான உத்தம வில்லன் படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது.
பில்லா-2:
அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கொடுத்தது, இதனையடுத்து தயாராகி வெளியான பில்லா-2 படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
மாற்றான்:
சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களில் மாற்றான் மிக பெரிய தோல்வியை கண்டது, அதிகமான பொருட் செலவில் உருவான இந்த படம் அஞ்சான் படத்தை விடவும் அதிகமான நஷ்டத்தை பெற்றது.
10 எண்றதுக்குள்ள:
விக்ரம் நடிப்பில் பீமா, தாண்டவம், கந்தசாமி போன்ற படங்கள் தோல்வி என்றாலும் 10 எண்றதுக்குள்ள படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டது.
அதேபோல் சிம்பு, தனுஷ் போன்றவர்களுக்கு AAA, தங்கமகன் போன்ற படங்கள் தோல்வியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions