ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு

Bookmark and Share

ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு

ஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது 2014-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.

ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், 2015-ம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ், 2016-ம் ஆண்டுக்கு ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகரும், நந்தமூரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலுக்கு ஆந்திரப்பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

என்.டி.ஆர். தேசிய விருது 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நினைவு பரிசும் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறுகையில், 2016-ம் ஆண்டுக்கு என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஆந்திர அரசின் விருதுக்கு ரஜினிகாந்த்  தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
மலேசிய விழாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல் - பரபரப்பை கிளப்ப போகும் அரசியல் பிரவேசம்.!
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ரஜினிக்கு போட்டியாக கமலும் அரசியல் அறிவிப்பு வெளியிடுகிறரா ?
விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
4 நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமல்ஹாசன், இன்றும் தொடரும் போட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions